முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை


முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
x

மஞ்சூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நீலகிரி

ஊட்டி,

மஞ்சூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பள்ளி மாணவி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால்டு கே.கே.மட்டம் பகுதியை சேர்ந்தவர் புச்சித்தன் என்ற கன்னட தாத்தா (வயது 67). இந்தநிலையில் 15.7.2020-ந் தேதி புச்சித்தன், 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி விளையாடுவது போல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.

இதற்கிடையே பள்ளி மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் மாணவியிடம் இதுகுறித்து கேட்டு உள்ளனர். அதற்கு அவள் முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மேலும் மாணவிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.

சிறை தண்டனை

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் எமரால்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புச்சித்தினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புச்சித்தனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். பின்னர் போலீசார் புச்சித்தனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story