மின்னல் தாக்கி முதியவர் பலி


மின்னல் தாக்கி முதியவர் பலி
x

காரியாபட்டி அருகே மின்னல் தாக்கி முதியவர் பலியானார்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே சின்ன கம்பிக்குடியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 60). விவசாயி. நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அப்போது தமிழரசன் வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஆவியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story