ரெயிலில் வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு
ரெயிலில் வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ராணிப்பேட்டை
அரக்கோணம்
ரெயிலில் வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்திற்கு கடந்த 22-ந் தேதி இரவு வந்த புறநகர் ரெயிலில் முதியவர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அந்த முதியவரை போலீசார் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிகிச்சையின் போது அவர் நாமக்கல்லை சேர்ந்தவர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளார். மற்ற எந்த விவரமும் தெரியவில்லை. இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்த முதியவர் யார், நாமக்கல்லில் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story