பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
திருவாரூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம், ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி, தலைவர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகளாக மாநில தலைவர் ராமசாமி, மாநில பொதுச்செயலாளர் பிச்சைவேலு, பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் துணைத்தலைவர்கள், இணை செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3, இளநிலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார். முடிவில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜயன் நன்றி கூறினார்.