பழைய பென்ஷன் திட்டம், அகவிலைப்படி வழங்க வேண்டும்
பழைய பென்ஷன் திட்டம், அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று மாவட்ட அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட அனைத்து ஓய்வூதியர் மற்றும் மூத்த குடிமக்கள் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் செல்லப்பா தலைமையில் ராமநாதபுரம் ஜனார்தன் மாளிகையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க ராமநாதபுரம் மண்டல மாநில துணைத்தலைவர் ஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க மாவட்ட தலைவராக செல்லப்பா, செயலாளராக நாகரெத்தினம், பொருளாளராக குருசாமி மற்றும் 18 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓய்வூதியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வரவேண்டும். மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story