மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடி தூவி சங்கிலி பறிப்பு
வீரவநல்லூரில் மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடி தூவி மர்மநபர்கள் சங்கிலி பறித்துச் சென்றனர்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் கட்டளை தெருவைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது 90). ரெங்கசாமி இறந்த நிலையில் பாக்கியலட்சுமி தற்போது மகன், மருமகள் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் அனைவரும் சென்ற நிலையில், பாக்கியலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பாக்கியலட்சுமியின் வீடு புகுந்து, நூதன முறையில் அவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி சுமார் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.