ஓடும் பஸ்சில் மூதாட்டி நகை மாயம்


ஓடும் பஸ்சில் மூதாட்டி நகை மாயம்
x

ஓடும் பஸ்சில் மூதாட்டி நகை மாயமானது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மெட்டில்பட்டியை சேர்ந்தவர் காத்தனன். இவரது மனைவி ராமலட்சுமி (வயது75).

இவர் சொந்த வேலையாக சிவகங்கை செல்வதற்காக அருப்புக்கோட்டையில் இருந்து சிவகங்கை செல்லும் அரசு பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார்.அருப்புக்கோட்டை மரக்கடை பஸ் நிறுத்தம் அருகே டிக்கெட் எடுப்பதற்காக தான் வைத்திருந்த பையை பார்த்தபோது அதிலிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.6,500, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, ஏ.டி.எம். கார்டு ஆகியவை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து ராமலட்சுமி அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story