ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 12 பேர் காயம்


ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 12 பேர் காயம்
x

ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 12 பேர் காயம்

மதுரை

மேலூர்,

மதுரையில் இருந்து பண்ருட்டிக்கு மினி வேன் ஒன்று வந்தது. மேலூரில் இரவு 1 மணியளவில் நான்கு வழி சாலையில் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அப்போது அவ்வழியே நாகர்கோவிலில் இருந்து 32 பயணிகளுடன் சென்னைக்கு வந்த ஆம்னி பஸ் ஏற்கனவே சாலையில் கவிழ்ந்து கிடந்த வேன் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது நிலை தடுமாறி சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் நாகர்கோவில் தென்காமுத்தூரை சேர்ந்த கணேசன்(வயது 42) உள்பட 12 பேர் காயமடைந்தனர். தகவல் கிடைத்து மேலூர் சுங்கச்சாவடி விபத்து மீட்பு கார்த்திக் தலைமையிலான குழுவினர், மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனி, இன்ஸ்பெக்டர் சார்லஸ், தினேஷ் மற்றும் மேலூர் தீயணைப்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்தினால் நள்ளிரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story