கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்
தட்டார்மடத்தில் கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் செட்டியார் தெற்குதெருவை சேர்ந்தவர் வியாகப்பன் (வயது 59). இவரிடம் தட்டார்மடம் அருகே நடுவக்குறிச்சி கண்டியாபுரத்தை சேர்ந்த ஏசுவடியான் மகன் தேவதிரவியம் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.2 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த 2022-ல் கடன் தொகைக்கு காசோலை மூலம் கடனை திருப்பி தருவதாக தேவதிரவியம் கூறினாராம். ஆனால் பணம் மற்றும் செக் தரவில்லையென கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வியாகப்பன், கொம்மடிக்கோட்டையில் உள்ள சர்ச்சுக்கு சென்றார். அப்போது அங்குவந்த தேவதிரவியத்திடம், பணத்தை திருப்பி தருமாறு வியாகப்பன் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தேவதிரவியம், வியாகப்பனை அவதூறாக பேசி தாக்கிவிட்டு ஓடிவிட்டாராம். இதில் காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது குறித்த புகாரின்பேரில் தேவதிரவியம் மீது தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.