ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

தொடரும் உயிர்ப்பலி: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தால் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்ட தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களில் நிகழ்ந்துள்ள 24-வது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே இது காட்டுகிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து பரிந்துரைக்க வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. குழுவின் அறிக்கையை திட்டமிட்டபடி ஒரு வாரத்துக்குள் பெற்று உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story