சேலம் வழியாக செல்லும் 4 சிறப்பு ரெயில்களின் இயக்கம் மேலும் 2 மாதத்துக்கு நீட்டிப்பு


சேலம் வழியாக செல்லும் 4 சிறப்பு ரெயில்களின் இயக்கம் மேலும் 2 மாதத்துக்கு நீட்டிப்பு
x

சேலம் வழியாக செல்லும் 4 சிறப்பு ரெயில்களின் இயக்கம் மேலும் 2 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

சூரமங்கலம்:

கேரள மாநிலம் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலம் விஜயபுரா - கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07385) மற்றும் கொல்லம் - விஜயபுரா சிறப்பு ெரயில் (வண்டி எண் 07386) ஆகிய 2 ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் சிறப்பு ரெயில்கள் மேலும் 2 மாத காலத்துக்கு நீட்டிப்பு செய்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது, அதன்படி, விஜயபுரா- கொல்லம் சிறப்பு ரெயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் சேலம் வழியாக இயக்கப்படும். இதேபோல் மறு மார்க்கத்தில், கொல்லம்- விஜயபுரா சிறப்பு ரெயில் ஜனவரி மாதம் 18-ந் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் சேலம் வழியாக இயக்கப்படும்.

இதேபோல், ஐதராபாத்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 07127), மேலும் 2 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி மாதம் 10-ந் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இதேபோல் மறு மார்க்கத்தில் கொல்லம்- ஐதராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 07128) ஜனவரி மாதம் 11-ந் தேதி வரை புதன் கிழமைகளில் சேலம் வழியாக இயக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story