செய்யாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
தொடர் மழையின் காரணமாக கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
திருவண்ணாமலை
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்ததால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றன.
மேலும் ஜவ்வாதுமலை பகுதியில் கனமழை காரணமாக மலை அடிவாரத்தில் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்ட அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணையில் இருந்து சுமார் 70 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன.
இதேபோன்று ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள செங்கம் குப்பநத்தம் அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து கரையின் இருபுறமும் தொட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
செய்யாற்றில் இருகரையும் தொட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை அப்பகுதி மக்கள் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
Related Tags :
Next Story