ஊராட்சி தலைவி போலீசில் புகார்
பணிசெய்ய விடாமல் தடுப்பதாக ஊராட்சி தலைவி போலீசில் புகார் செய்துள்ளார்.
கணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவி செல்வி விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் வேலூர் தாலுகா போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கணியம்பாடி ஊராட்சியில் துணை தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷகிலா என்பவரின் கணவர் முரளி என்னை பணி செய்ய விடாமல் தடுப்பதுடன், இழிவு படுத்தி பேசுவதோடு, கொலை மிரட்டல் விடுக்கிறார். கடந்த 8 மாத காலமாக ஊராட்சியில் செயல்படுத்தும் திட்ட பணிகளுக்கு கையெழுத்திடாமல் அவரது மனைவி ஷகிலாவும் புறக்கணிக்கிறார். இதனால் ஊராட்சி பணிகள் அதிகளவில் பாதிக்கிறது. சாதி பெயரை கூறி என்னை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் துணை தலைவி மற்றும் அவரது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் மனு வழங்கிய போது விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய பொருளாளர் குமார், மாநில துணை செயலாளர் சரவணன், ஆற்காடு தொகுதி துணை செயலாளர் மோகனவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்