மோட்டார் சைக்கிளில் சென்ற ஊராட்சி செயலாளர் மயங்கி விழுந்து சாவு


மோட்டார் சைக்கிளில் சென்ற ஊராட்சி செயலாளர் மயங்கி விழுந்து சாவு
x

மோட்டார் சைக்கிளில் சென்ற ஊராட்சி செயலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 50). இவர் சாத்தம்பாடி ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். தற்போது குடும்பத்துடன் சிலால் கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சாத்தம்பாடி ஊராட்சியில் பணியை முடித்துவிட்டு வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் சிலால் கிராமத்திற்கு தா.பழூர்- ஜெயங்கொண்டம் சாலையில் சென்று கொண்டிருந்தார். கோடங்குடி அருகே வந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த முருகேசனுக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story