10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்


10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
x

கரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகள் பெற்ற தேர்ச்சி விகிதம் விவரம் வருமாறு:-

கரூர்

பொதுத்தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டன. அதன்படி கரூர் மாவட்டம் 83 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இதில் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 82 மாணவர்கள், 89 மாணவிகள் என மொத்தம் 171 பேர் தேர்வு எழுதினர். இதில் 58 மாணவர்கள், 84 மாணவிகள் என 142 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 83.04 சதவீதமாகும்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் 355 மாணவர்கள், 770 மாணவிகள் என 1,125 பேர் தேர்வு எழுதினர். இதில் 215 மாணவர்கள், 720 மாணவிகள் என 935 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 83.11 சதவீதமாகும்.

அரசு பள்ளிகளில் 3 ஆயிரத்து 195 மாணவர்கள், 3 ஆயிரத்து 204 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 399 பேர் தேர்வு எழுதினர். இதில் 2 ஆயிரத்து 144 மாணவர்கள், 2 ஆயிரத்து 724 மாணவிகள் என 4 ஆயிரத்து 868 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 76.07 சதவீதமாகும்.

நகராட்சி பள்ளிகள்

நகராட்சி பள்ளிகளில் 92 மாணவர்கள், 102 மாணவிகள் என மொத்தம் 194 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 மாணவர்கள், 80 மாணவிகள் என மொத்தம் 118 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 60.82 சதவீதமாகும்.

பகுதி உதவிபெறும் பள்ளிகளில் 297 மாணவர்கள், 225 மாணவிகள் என மொத்தம் 522 பேர் தேர்வு எழுதினர். இதில் 233 மாணவர்கள், 192 மாணவிகள் என 425 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 81.42 சதவீதமாகும்.

தனியார் பள்ளிகள்

தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1,555 மாணவர்கள், 1,256 மாணவிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 811 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,494 மாணவர்கள், 1,248 மாணவிகள் என 2 ஆயிரத்து 742 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.55 சதவீதமாகும்.

சுயநிதி (டி.எஸ்.இ.) பள்ளிகளில் 504 மாணவர்கள், 325 மாணவிகள் என மொத்தம் 829 பேர் தேர்வு எழுதினர். இதில் 458 மாணவர்கள், 314 மாணவிகள் என 772 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.12 சதவீதமாகும்.


Next Story