விருத்தாசலத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் தட்டு ஏந்தி போராட்டம்
விருத்தாசலத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் தட்டு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தட்டு ஏந்தி போராட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும், அகவிலைப்படி, குடும்ப நலநிதி, மருத்துவப்படி வழங்க வேண்டும், ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.பரமசிவம் தலைமை தாங்கினார். இளங்கோவன், ஆர்.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜானகி தேவி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் கேசவன், கோவிந்தராஜ், பாண்டுரங்கன், இயேசு அடியான் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் தங்கவேல், கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தட்டுகளை கையில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் கணபதி நன்றி கூறினார்.