பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு
காரியாபட்டி அருகே பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே கரியனேந்தல்- கணக்கனேந்தலுக்கு இடையில் தனியார் நிறுவனம் சார்பில் ஆன்லைன் பணிக்காக பல்வேறு இடங்களில் பூமிக்கு அடியில் கேபிள்கள் பதிக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆண்டனா பொருத்தும் பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பொருத்தப்படும் ஆண்டனாவில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் துணை தாசில்தார் அழகுப்பிள்ளை, மல்லாங்கிணறு சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரன், ராபியம்மாள் ஆகியோர் முன்னிலையில் தனியார் நிறுவன அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பொதுமக்கள் அனுமதி இல்லாமல் எந்தவொரு பணிகளும் நடைபெறாது என தனியார் நிறுவனம் கூறியதன் பேரில் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.