பொங்கலூரை அடுத்த நாச்சி பாளையத்தில் மயான இடத்தை மற்றொரு சமூகத்திற்கு பங்கீடு செய்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொங்கலூரை அடுத்த நாச்சி பாளையத்தில் மயான இடத்தை மற்றொரு சமூகத்திற்கு பங்கீடு செய்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
x

பொங்கலூரை அடுத்த நாச்சி பாளையத்தில் மயான இடத்தை மற்றொரு சமூகத்திற்கு பங்கீடு செய்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர்

பொங்கலூர்

பொங்கலூரை அடுத்த நாச்சி பாளையத்தில் மயான இடத்தை மற்றொரு சமூகத்திற்கு பங்கீடு செய்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மயானம்

பொங்கலூர் அருகே நாச்சிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு உள்ள 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை பல ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அந்த இடத்தில் மற்றொரு சமூகத்திற்கு இட ஒதுக்கீடு செய்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றது.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மாற்று இடம்

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தற்காலிகமாக இந்த இடத்தைப் பிரித்து கொடுக்கப்படாது என்றும், அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் 2 மணி நேரத்திற்கு மேல் ஊராட்சி அலுவலக பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Next Story