1½ ஆண்டுகளுக்கு முன்பு குழாய்கள் அமைத்தும் ஊராட்சி கோட்டை குடிநீர் இணைப்பு வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.


1½ ஆண்டுகளுக்கு முன்பு குழாய்கள் அமைத்தும் ஊராட்சி கோட்டை குடிநீர் இணைப்பு வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
x
தினத்தந்தி 2 Oct 2022 1:00 AM IST (Updated: 2 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon
ஈரோடு

1½ ஆண்டுகளுக்கு முன்பு குழாய்கள் அமைத்தும் ஊராட்சி கோட்டை குடிநீர் இணைப்பு வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

டவர்லைன் காலனி

ஈரோடு மாநகராட்சி 21-வது வார்டுக்கு உள்பட்டது குமலன் குட்டை டவர்லைன் காலனி. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் கோரிக்கை அளித்து விட்டோம். ஆனால் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். டவர்லைன் காலனி ஈரோடு மாநகரில் வீடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று. எனவே தினசரி இங்கிருந்து வெளியேறும் கழிவுகளும் அதிகமாகவே உள்ளன.

சாக்கடை

மாநகராட்சி மூலம் தினசரி குப்பை சேகரிப்பு பணி நடக்கிறது. வீடுகள் தோறும் தூய்மை பணியாளர்கள் வந்து குப்பை சேகரிக்கிறார்கள். ஆனால், வீட்டை ஒட்டி உள்ள சாக்கடை கால்வாய்களில் தூய்மைப்பணி என்பது நடைபெறுவதே இல்லை. எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரி சுமார் 8 மாதங்கள் ஆகின்றன. சாக்கடை கால்வாய்களில் மரங்கள் வளர்ந்து விட்டன. பல இடங்களில் புதர் மண்டிக்கிடக்கிறது. இதுபற்றி மாநகராட்சி கவுன்சிலரிடம் கேட்டால் செய்து தருவதாக சொல்கிறார். பல மாதங்களாக இதே பதிலைத்தான் கூறுகிறார்.

கடந்த மழையின்போது பாதாள சாக்கடை வழியாக பல வீடுகளில் கழிவுநீர் உள்ளே புகுந்து விட்டது. பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக இது ஏற்பட்டது. ஆனால் அதையும் சரி செய்யவில்லை. சாக்கடை கால்வாய்களில் பெருக்கான் (பெருச்சாளி) ஓட்டை போட்டு வீடுகளில் உள்ள குழாய்களில் உடைப்பு ஏற்படுகிறது. சாக்கடை புழுக்கள் சமையல் அறைவரை வருகின்றன. சாக்கடை சுத்தம் செய்யாததால் வீடுகளுக்குள் துர்நாற்றம் வீசுகிறது.

குடிநீர்

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சிக்கோட்டை குடிதண்ணீர் இணைப்பு வழங்கப்படும் என்று குழாய்கள் பொருத்தப்பட்டன. ஆனால் இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பில் சரியாக தண்ணீர் வருவது இல்லை. மின்சாரம் இல்லை என்றால் தண்ணீர் வருவதே இல்லை. குறைந்த அளவு தண்ணீர் வருவதால் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைப்பது இல்லை.

இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மாநகராட்சியின் முக்கிய பகுதியில் உள்ள குமலன்குட்டை டவர்லைன் காலனி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர மாநகராட்சி அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story