கண்கவர் நிகழ்ச்சி நடத்தி கலைஞர்கள் அசத்தல்


கண்கவர் நிகழ்ச்சி நடத்தி கலைஞர்கள் அசத்தல்
x

தூத்துக்குடி நெய்தல் கலைவிழாவில் கண்கவர் நிகழ்ச்சி நடத்தி கலைஞர்கள் அசத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் இணைந்து நடத்தும் நெய்தல் கலைவிழா தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் பாரம்பரியமிக்க மண்சார்ந்த கலைஞர்கள் தங்கள் குழுவினருடன் பங்கேற்று தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் உணவுத்திருவிழா, புத்தக கண்காட்சி, கைவினை பொருட்கள் கண்காட்சி போன்றவையும் நடந்து வருகின்றன.

3-வது நாள் கலைவிழா நேற்று மாலை தொடங்கி நடந்தது. கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். விழாவில் வில்லுப்பாட்டு, பறையாட்டம், சிலம்பாட்டம், துடும்பாட்டம், கரகாட்டம், இசைக்கச்சேரி, தெருக்கூத்து, குச்சி ஆட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் விடிய விடிய நடந்தது. வண்ணமயமான மேடையில் கண்கவர் நிகழ்ச்சியை நடத்திய கலைஞர்கள் அசத்தினர். இதனை ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர். விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நெய்தல் கலைவிழா நிறைவு நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.45 மணிக்கு நடக்கிறது.


Next Story