மோட்டார் சைக்கிளில் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்-போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவு

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்-போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவு
x

நெல்லை மாநகரில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகரில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஹெல்மெட் அவசியம்

நெல்லை மாநகரில் 2022-ம் ஆண்டில் 393 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 91 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். அதில் 54 பேர் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்து உள்ளனர்.

எனவே இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வு

மேலும் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை மாநகர பகுதியில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இருசக்கர வாகனம் ஓட்டும்போது மற்றும் பின்புறத்தில் பயணிக்கும் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story