தொழிலாளியை தாக்கியவர் கைது


தொழிலாளியை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2022 1:00 AM IST (Updated: 7 Nov 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அடுத்த கொங்குபட்டி அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47), கூலி தொழிலாளி. இவர் வீட்டின் முன்பு கான்கிரீட் சாலையில் அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி (32) என்பவரது மைத்துனர் ராமு என்பவர் அவரது வீட்டு வேலைக்காக மணல் கொட்டியதாக தெரிகிறது. இதற்கு இங்கு மணல் கொட்டுகிறீர்கள் என்று மாரியப்பன் கேட்டபோது, வீரமணி தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் இருந்த பிளாஸ்டிக் பொருளை எடுத்து மாரியப்பனின் கன்னத்தில் அடித்ததில் அவர் காயமடைந்தார். மேலும் மாரியப்பனை கொல்லாமல் விடமாட்டேன் என அவர் மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து மாரியப்பன் தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.


Next Story