அரசு மருத்துவமனை பெண்கள் வார்டுக்குள் புகுந்து செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது
அரசு மருத்துவமனை பெண்கள் வார்டுக்குள் புகுந்து செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 6-வது மாடியில் உள்ள பெண்கள் வார்டுக்குள் புகுந்த ஒருவர் அவரது செல்போனில் வார்டு பகுதியை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவ அலுவலர் குமார் அந்த நபரிடம் எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதையடுத்து அந்தநபர் குமாரை தகாதவார்த்தையால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குமார் ெகாடுத்த புகாாின்ேபரில், பசுபதிபாளையம் போலீசார் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண்கள் வார்டுக்குள் புகுந்து வீடியோ எடுத்தவா் தாந்தோணிமலையை சேர்ந்த சந்திரசேகரன் (42) என்பது ெதரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story