மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
x
தினத்தந்தி 26 May 2023 10:47 PM IST (Updated: 27 May 2023 1:26 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 58). இவரது மனைவி கிரிஜா. இவர்களுக்கு கோபிகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டு மாடியில் நின்றிருந்த குமார் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story