கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர் கைது


கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர் கைது
x

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு போட்டவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது45). மகாராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமாரிடம் ஆவின் விற்பனை கடை அமைக்க உள்ள இடத்திற்கு பட்டா வழங்குமாறு முகமது உசேன் கேட்டுள்ளார். அதற்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க கூறியுள்ளார். இதற்கிடையே முகமது உசேன் நேற்று காலை மகாராஜபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு போட்டு விட்டு வாசலில் ஆவின் கடை போர்டை வைத்து சென்றார். இதுகுறித்து கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது உசேனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story