போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர் கைது


போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர் கைது
x

நாட்டறம்பள்ளி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக பேசியும், சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து இடையூறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மதுபோதையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்னராஜ் மகன் குகன் (வயது 40) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story