போலீசை பணிசெய்ய விடாமல் தடுத்தவர் கைது
பெருமாள்புரம் பகுதியில் போலீசை பணிசெய்ய விடாமல் தடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நயினார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருமாள்புரம் சித்தி விநாயகர் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 20) என்பதும், கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரை பணிசெய்ய விடாமல் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story