போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தவர் கைது


போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தவர் கைது
x

போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குறுக்குத்துறை அருகே மணிகண்டன் (வயது 34) என்பவர் மது விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது அவர்களை பணிசெய்ய விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story