ஊழல் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பியவர் கைது
ஊழல் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பியவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் மாவட்ட அண்ணாமலை பேரியக்க தலைவர் எனக்கூறி அறிவானந்தன் என்பவர் மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியலில் உள்ள தி.மு.க.வினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் கோஷங்களை எழுப்பினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து தி.மு.க.விற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story