சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் வீட்டுக்கு பூட்டு


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் வீட்டுக்கு பூட்டு
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் வீட்டுக்கு பூட்டு போடப்பட்டது. தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 44). கூலித்தொழிலாளி. இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கபட்ட 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுமியை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு ராஜாவின் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது அங்கு ராஜா இல்லாததால், ராஜாவின் மனைவியை வெளியே அனுப்பிவிட்டு, அப்பகுதி மக்கள் ராஜாவின் வீட்டுக்கு பூட்டு போட்டனர்.

பின்னர் சம்பவம் குறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார், தலைமறைவான ராஜாவை பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தன் சொந்த மகளையே பாலியல் துன்புறுத்தல் செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிற யில்அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story