சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூர் குளத்து மேட்டுத்தெருவை சேர்ந்த பாலையா மகன் லோகேஷ் என்கிற பாலமுருகன் (வயது 22). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலமுருகன், அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என்று அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.






Next Story