பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் 25 வயது பெண். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று தைக்கால் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அந்த பெண் அங்கே இரவு தூங்கியுள்ளார். அப்போது அந்த உறவினர் வீட்டிற்கு வந்த பழைய மாரியம்மன் கோவில் சாலையை சேர்ந்த செந்தில்குமார் (43) என்பவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது உறவினர் மற்றும் செந்தில்குமாரின் மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அந்த பெண்ணிடம் வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் குமாரை கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணின் உறவினர் மற்றும் செந்தில்குமாரின் மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.