கடையில் நோட்டு புத்தகங்கள் திருடியவர் கைது
கடையில் நோட்டு புத்தகங்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
தாந்தோணிமலை அருகே உள்ள சுங்கபேட்டையை சேர்ந்தவர் நடேஷ் (வயது 33). இவர் கோவை ரோட்டில் ஸ்டேஷனரிஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த நோட்டு புத்தகங்கள் அடிக்கடி காணாமல் போனதாக கூறப்படுகிறது.இதுகுறித்து நடேஷ் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், நோட்டு புத்தகங்களை திருடியது கரூர் செல்வநகரை சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story