வீட்டில் திருடியவர் கைது
பழவூா் அருகே வீட்டில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
வடக்கன்குளம்:
பழவூர் அருகே உள்ள லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த அய்யப்பன் மனைவி ஞான ஜோதி (வயது 55). இவர்களுடைய மகன் பிரதீப். சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் வீட்டில் இருக்கும்போது அடையாளம் தெரியாத நபர் வீட்டில் புகுந்து, அங்கிருந்த ரொக்கப்பணம் 39 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை திருடிச் சென்றுள்ளார். இதுபற்றி ஞான ஜோதி, பழவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பணத்தை திருடியது கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் முத்துகுமார் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் திருடிய பொருட்களையும் மீட்டனர்.
Related Tags :
Next Story