வெல்டிங் பட்டறையில் நீர்மூழ்கி மோட்டாரை திருடியவர் கைது


வெல்டிங் பட்டறையில் நீர்மூழ்கி மோட்டாரை திருடியவர் கைது
x

வெல்டிங் பட்டறையில் நீர்மூழ்கி மோட்டாரை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 56). இவா் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். ராஜாராம் கடந்த 21-ந்தேதி இரவு வழக்கம் போல் தொழில் முடிந்து பட்டறையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை அவர் பட்டறையை திறந்து பார்க்கும் போது பழுது நீக்க வந்த நீர்மூழ்கி மோட்டார் ஒன்று திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பட்டறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போது, அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி (45) என்பவர் நீர்மூழ்கி மோட்டாரை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ராஜாராம் அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூா்த்தியை கைது செய்தனர்.


Next Story