வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ராஜ்குமார் என்ற தொந்தி (வயது 22). இவர், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மேட்டுப்பட்டியில் உள்ள கல்லறை அருகே தீபாவளி அன்று பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தாராம். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தரக்குடையான் (34) என்பவரது வீட்டுக்குள் பட்டாசு விழுந்து உள்ளது. இதனை தரக்குடையான் கண்டித்து உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து தரக்குடையான் மற்றும் அவரது அண்ணன் முனியசாமி (37) ஆகியோரை அரிவாள், கம்பு ஆகியவற்றால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story