கவரிங் நகையை அடகு வைக்க முயன்றவர் கைது


கவரிங் நகையை அடகு வைக்க முயன்றவர் கைது
x

கவரிங் நகையை அடகு வைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்


விருதுநகர் பழைய பஸ்நிலையம் அருகே தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்திற்கு தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த விக்னேஷ் குமார் (வயது 24) என்பவர் 4½ பவுன் தங்க நகையை அடகு வைக்க வந்தார். அந்த நகையை பரிசோதனை செய்தபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நிதி நிறுவன உதவி மேலாளர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் விக்னேஷ்குமாரை விருதுநகர் மேற்கு போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனா்.


Related Tags :
Next Story