கிணற்றில் குளிக்க சென்றவர் பிணமாக மீட்பு


கிணற்றில் குளிக்க சென்றவர் பிணமாக மீட்பு
x

கிணற்றில் குளிக்க சென்றவர் பிணமாக மீட்கப்பட்டார்.

ராணிப்பேட்டை

வாலாஜா

கிணற்றில் குளிக்க சென்றவர் பிணமாக மீட்கப்பட்டார்.

வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் சின்ன தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் முனுசாமி (வயது 39). இவர் அதேப்பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரை தேடிச்சென்றபோது அவர் கிண்ணற்றில் இறந்துகிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story