ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தால் மனு அளிக்கலாம்


ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தால் மனு அளிக்கலாம்
x
தினத்தந்தி 18 Jun 2022 5:22 PM IST (Updated: 18 Jun 2022 5:23 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தால் மனு அளிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்/

திருவண்ணாமலை

ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜூலை மாதம் 29-ந் தேதி காலை 11 மணிக்கு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் சென்னை ஓய்வூதிய இயக்குனரக ஓய்வூதிய இயக்குனர் மற்றும் மாவட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தங்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் இதர ஓய்வூதிய பயன்கள் ஆகியவற்றிற்கான உத்தரவுகள்

இந்நாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தால் தங்களது கோரிக்கைகளை ஓய்வூதிய புத்தக எண், ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்தின் பெயர் மற்றும் ஓய்வு பெற்ற நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு இரட்டை பிரதியில் மாவட்ட கலெக்டருக்கு வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அனைத்து மனுக்களும் உரிய அலுவலருக்கு தக்க நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.

எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரால் நேரடியாக உரிய ஓய்வூதியதார்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ஓய்வூதியதாரர்கள் பயன் அடையலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story