செம்பட்டி அருகே குழாய் உடைந்து வீணாக சென்ற தண்ணீர்


செம்பட்டி அருகே குழாய் உடைந்து வீணாக சென்ற தண்ணீர்
x

செம்பட்டி அருகே பள்ளம் தோண்டும்போது குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது

திண்டுக்கல்

செம்பட்டியில் இருந்து மதுரை செல்லும் மெயின் ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டுப்பட்டி என்ற இடத்தில் பாலம் கட்டும் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் குழாயில் இருந்து தண்ணீர் பீறிட்டு எழுந்து வீணாகி சென்றது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.


Next Story