பெருந்தோட்டம் ஏரியை தூர்வார வேண்டும்


பெருந்தோட்டம் ஏரியை தூர்வார வேண்டும்
x

பெருந்தோட்டம் ஏரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கரில் பெருந்தோட்டம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் திருவெண்காடு, சின்ன பெருந்தோட்டம், அல்லி மேடு, தென்னாம்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இந்த ஏரியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் வயல்களுக்கு தண்ணீர் செல்லாத முடியாத நிலை உள்ளது. எனவே பெருந்தோட்டம் ஏரியை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story