அரசு பள்ளியில் திறந்த வெளியில் சமைக்கும் அவல நிலை


அரசு பள்ளியில் திறந்த வெளியில் சமைக்கும் அவல நிலை
x

புலியூர் அருகே அரசு பள்ளியில் திறந்த வெளியில் சமைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் சமையல் அறை கட்டித்தர பெற்றோர்கள் கோரிக் கை

கரூர்

திறந்த வெளியில் சமையல்

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புலியூர் அருகே உள்ள ஓடமுடையார் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஓடமுடையார் பாளையம், கோவில் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகின்ற மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் அறை இல்லை. இதனால் பள்ளி வளாகத்தில் திறந்தவெளியில் சமையல் செய்து மாணவ-மாணவிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோரிக்கை

தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் சமையல் செய்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.மேலும் பள்ளியின் அருகேயே கட்டளை வாய்க்கால் உள்ளதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களும் சில நேரங்களில் பள்ளிகளுக்குள் நுழைந்து சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.கடந்த 2 ஆண்டுகளாக அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு சமையல் அறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story