விஷம் குடித்த பெண் சாவு
தட்டார்மடம் அருகே விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
நெல்லை மாவட்டம் கூட்டப்பனை நடு தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 50) மீனவர். இவருடைய மனைவி உஷா (47). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜஸ்டின் புதிதாக வீடு கட்டியதில் கடன் ஏற்பட்டது. இதனால் அவருடைய மனைவி உஷா மன உளைச்சலில் இருந்ததாகவும், இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று உஷா, தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே பெரியதாழையில் உள்ள தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உஷா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story