விஷம் குடித்த பெண் சாவு


விஷம் குடித்த பெண் சாவு
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே விஷம் குடித்த பெண் சாவு

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் மங்கனூர் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் மனைவி பெர்லின் (வயது 28). இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பெர்லின் கடந்த 15-ந் தேதி தனது வீட்டில் எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெர்லின் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த பெர்லினுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story