விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
தஞ்சாவூர்
திருப்பனந்தாள்:
பந்தநல்லூர் அருகே குலசேகரநல்லூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் ராமதுரை(வயது 52) கூலித்தொழிலாளி. இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக ராமதுரை கடந்த 30-ந்தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக தஞ்சை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமதுரை இறந்தார். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story