கடலூர்மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை
கடலூர் மத்திய சிறையில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
கடலூர் முதுநகர்,
திடீர் சோதனை
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 1000-க்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 6 மணி அளவில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் சிறை அதிகாரிகளுடன் இணைந்து, கடலூர் மத்திய சிறையில் சோதனை நடத்தினர். அப்போது, கைதிகளின் அறை, அவர்களின் உடைமைகள் மற்றும் இதர இடங்களில், அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.
செல்போன் உள்ளதா?
இந்த திடீர் சோதனையின் போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், செல்போன்கள் மற்றும் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா? என ஆய்வு செய்தனர். சுமார் 1½ மணி நேரம் நடந்த சோதனையில் எவ்விதமான தடை செய்யப்பட்ட போதைப்பொருேளா, செல்போனோ கிடைக்கவில்லை என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், நேற்று அதிகாலை இந்த சோதனையால் கடலூர் மத்திய சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.