கைதான வாலிபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு


கைதான வாலிபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
x

திருட்டு வழக்கில் கைதான வாலிபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் மர்மநபர் புகுந்து அங்கு இருந்த சுமார் 20 பவுனுக்கும் மேற்பட்ட நகைகளை திருடி சென்றார். மேலும் டார்லிங் நகரில் 2 வீட்டிலும், மூகாம்பிகை நகரில் 2 வீட்டில் மர்மநபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் இந்த சம்பவங்களில் பாளையஞ்செட்டிக்குளத்தை சேர்ந்த அந்தோணி என்ற அரிவாள் பாண்டி (வயது 26) என்பவர் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் இங்கிருந்து கோவைக்கு தப்பிச்சென்ற அந்தோணி அங்கேயும் கைவரிசை காட்டியுள்ளார். இதனையடுத்து அவரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 பவுனுக்கும் அதிகமாக நகைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இதனை அறிந்த பாளையங்கோட்டை போலீசார் அந்தோணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.


Next Story