கடைக்கு பூட்டு போட முயன்ற போலீஸ்காரர்
சலூன் கடைக்காரரை அவதூறாக பேசி கடைக்கு பூட்டு போட முயன்ற போலீஸ்காரர் பேசிய காட்சி சமுக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளையில் ஒரு சலூன் கடைக்கு போலீஸ்காரர் ஒருவரின் மகன் முடி வெட்ட சென்று விட்டு வீடு திரும்பினார். ஆனால் சலூன் கடைக்காரர் முடியை சரியாக வெட்டவில்லை என ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு தவறுதலாக மற்றொரு சலூன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது சலூன் கடைக்காரர் கடையில் இல்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போலீஸ்காரர் அவதூறாக பேசி கடைக்கு பூட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து திசையன்விளை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் மீது சலூன் கடைக்காரர் புகார் செய்துள்ளார். இதுபற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story