பெற்ற தாயை கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர்-பரபரப்பு வாக்குமூலம்


ஆற்காடு அருகே பெற்ற தாயை கேபிள் ஒயரால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காடு அருகே பெற்ற தாயை கேபிள் ஒயரால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடும்பம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுலன். இவரது மனைவி வாணிஸ்வரி (வயது 53). ராகுலன் போலீஸ் துறையில் பணியாற்றி வந்தார். அவர் பணியின்போது விபத்தில் இறந்ததையொட்டி வாரிசு அடிப்படையில் அவரது மனைவி வாணிஸ்வரிக்கு போலீஸ் துறையில் வேலை வழங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் விருப்ப அடிப்படையில் ஓய்வு பெற்றார்.

இவர்களது மகன்கள் ராஜேஷ் மற்றும் தினேஷ் (33) ஆகிேயார் கடந்த 2010-ம் ஆண்டில் ஒரே நேரத்தில் போலீஸ்காரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தினேஷ் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையில் நன்னடத்தை சரியில்லாததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மனைவியை பிரிந்தார்

தினேஷ் மனைவி பிரியங்கா. இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் சொந்த ஊரான சக்கரமல்லூரில் வசித்து வந்துள்ளனர். வாணிஸ்வரியும் அவர்களுடன் வசித்து வந்தார்.

தினேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் எதிரொலியாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரியங்கா ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட்டில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

தற்போது அவர் மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

தினேசின் தாயார் வாணிஸ்வரியும் மகனிடமிருந்து பிரிந்து ஆற்காட்டில் தனியாக வசித்து வந்தார்.

இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆற்காட்டில் இருந்து வீட்டை காலி செய்து கொண்டு மீண்டும் சக்கரமல்லூருக்கு சென்று அங்கு வசித்து வந்துள்ளார். வாணிஸ்வரியின் மகள் பிரியா ஆற்காட்டை அடுத்த திமிரியில் வசித்து வருகிறார். தாய்-மகள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வது வழக்கம்.

கடந்த 2 நாட்களாக வாணிஸ்வரி மகள் பிரியாவிடம் பேசவில்லை. அவர் போன் செய்தாலும் வானிஸ்வரி எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரியா நேற்று காலை தனது மகன் தாரகேசை அழைத்துக் கொண்டு சக்கரமல்லூர் வந்துள்ளார். தினேஷிடம் அம்மா எங்கே என்று அவர் கேடகவே படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார் என தினேஷ் கூறியுள்ளார்.

உடனே பிரியா மகன் தாரகேசுடன் உள்ளே சென்றார். அங்கு கட்டிலில் வாணிஸ்வரி போர்வையை போர்த்தியிருந்த நிலையில் படுத்திருந்தார். போர்வையை தாரகேஷ் இழுத்தபோது வாணிஸ்வரி அலங்கோலமாய் இறந்து கிடந்தார். தாய் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியா நிலையில் கூச்சலிட்டு அழுதுள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்து விட்டு ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினேஷை பிடித்தபோது தாய் வாணிஸ்வரியை கேபிள் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து போலீஸ்

போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தாயென்றும் பாராமல் போதையில் வெறிபிடித்து அவரை அதுவும் போலீஸ்காரராக வேலை பார்த்த அவரது மகனே கொடூரமாக கேபிள் ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story