தூய்மை பணியில் களம் இறங்கிய போலீசார்
தூய்மை பணியாளர்கள் இல்லாததால் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணியில் போலீசார் களம் இறங்கினர்.
கொரடாச்சேரி:
தூய்மை பணியாளர்கள் இல்லாததால் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணியில் போலீசார் களம் இறங்கினர்.
தூய்மை பணியாளர் காலியிடம்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் 16 போலீஸ் நிலையங்களில் தூய்மை பணியாளர் காலியிடம் இருப்பதாக கூறப்படுகிறது. திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இதன் காரணமாக போலீஸ் நிலைய வளாகத்தில் சுத்தம் செய்யும் பணியில் போலீசார் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்.
களம் இறங்கினர்...
அந்த வகையில் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட போலீசார் போலீஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் களம் இறங்கினர்.
எனவே உடனடியாக போலீஸ் நிலையங்களில் தூய்மை பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.